பிரிவு - 4, 5, 6 

பண்ணிசைப் பாடல்கள்

போட்டி விதிமுறைகள்

1.பண்ணோடு தாளத்தோடு பாட வேண்டும்
2.நேரம் 15 மணித்துளிகள்
3.​விநாயகர் துதி, கீழே தரப்பட்டுள்ள மூன்று தேவாரங்களில் விரும்பிய
ஒரு தேவாரம், பஞ்ச புராணம் , அபிராமி அந்தாதி அல்லது திருப்புகழ்.
பாடவேண்டும்
4.நடுவர்கள் முடிவே இறுதியானது
5.போட்டி ZOOM செயலி மூலம் இடம்பெறும்
6.போட்டி நடைபெறும் திகதி, ZOOM இணைப்பு பின்னர் வழங்கப்படும்.

பாடத்திட்டம்

1. நால்வர் துதி
2. திருஞானசம்பந்தர் சம்பந்தர் அருளிய முதல் தேவாரம்
3. திருநாவுக்கரசர் அருளிய முதல் தேவாரம்
4. சுந்தரமூர்த்தி நாயனார் அருளிய முதல் தேவாரம்

விநாயகர் துதி


பண் : வியாழக்குறிஞ்சி
ராகம்: செளராஷ்ட்ரம்
தாளம் : ஆதி
பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே.

தேவாரம்  (கோணமாமலை)


பண் :  புறநீர்மை
ராகம் : பூபாளம்
தாளம் :  ஆதி

(1)
நிரை கழல் அரவம் சிலம்பு ஒலி அலம்பும்
நிமலர், நீறு அணி திருமேனி
வரை கெழு மகள் ஓர்பாகமாப் புணர்ந்த
வடிவினர், கொடிஅணி விடையர்
கரை கெழு சந்தும் கார் அகில் பிளவும்
அளப்ப(அ)ருங் கன மணி வரன்றி,
குரைகடல் ஓதம் நித்திலம் கொழிக்கும்
கோணமாமலை அமர்ந்தாரே


(2)
“தாயினும் நல்ல தலைவர்!” என்று அடியார்
தம் அடிபோற்று இசைப்பார்கள்
வாயினும் மனத்தும் மருவி நின்று அகலா
மாண்பினர், காண் பலவேடர்,
நோயிலும் பிணியும் தொழலர்பால் நீக்கி
நுழைதரு நூலினர் ஞாலம்
கோயிலும் சுனையும் கடல் உடன் சூழ்ந்த
கோணமாமலை அமர்ந்தாரே.

(3).
குற்றம் இலாதார் குரைகடல் சூழ்ந்த
கோணமாமலைஅமர்ந்தாரை,
கற்று உணர் கேள்விக் காழியர்பெருமான்—
கருத்து உடைஞானசம்பந்தன்-
உற்ற செந்தமிழ் ஆர் மாலை ஈர்—ஐந்தும்
உரைப்பவர்,கேட்பவர், உயர்ந்தோர்
சுற்றமும் ஆகித் தொல்வினை அடையார்;
தோன்றுவர், வான் இடைப் பொலிந்தே

பஞ்ச புராணம் 
தேவாரம்  

பண்: காந்தார பஞ்சமம்
ராகம் : கேதாரகெளளை
தாளம் : ஆதி

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே


திருவாசகம்

திருவெண்ணெய்நல்லூர்

ராகம் : மோகனம்

அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெருமானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.


திருவிசைப்பா


ராகம்  : ஆனந்த பைரவி
தாளம்  : ஆதி

ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே !
உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே !
தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே !
சித்தத்துள் தித்திக்கும் தேனே !
அளிவளர் உள்ளத்(து) ஆனந்தக் கனியே !
அம்பலம் ஆடரங் காக
வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே.

திருப்பல்லாண்டு

மன்னுக தில்லை வளர்கநம்
பத்தர்கள் வஞ்சகர் போயகல
பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து
புவனி யெல்லாம் விளங்க
அன்னநடை மடவாள் உமைகோன்
அடியோ முக்கருள் புரிந்து
பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த
பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே

திருத்தொண்டர் புராணம்

கற்பனை கடந்த சோதி
கருணையே உருவம் ஆகி
அற்புதக் கோலம் நீடி அரு
மறைச் சிரத்தின் மேலாம்
சிற்பர வியோமம் ஆகும் திருச்
சிற்றம்பலத்துள் நின்று
பொற்புடன் நடம் செய்கின்ற பூங்
கழல் போற்றி போற்றி.

அபிராமி அந்தாதி


தனம் தரும், கல்வி தரும், ஒருநாளும் தளர்வு அறியா
மனம் தரும், தெய்வ வடிவும் தரும், நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும், நல்லன எல்லாம் தரும், அன்பர் என்பவர்க்கே--
கனம் தரும் பூங் குழலாள், அபிராமி, கடைக்கண்களே

திருப்புகழ்

கம்பீர நாட்டை
தாளம் : ஆதி
அருளியவர் அருணகிரிநாதர் கைத்தல நிறைகனி

தத்தன தனதன தத்தன தனதன
தத்தன தனதன ...... தனதான
கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுக ...... னடிபேணிக்
கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
கற்பக மெனவினை ...... கடிதேகும்
மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
மற்பொரு திரள்புய ...... மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே
முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய ...... முதல்வோனே
முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
அச்சது பொடிசெய்த ...... அதிதீரா
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புன மதனிடை ...... இபமாகி
அக்குற மகளுட னச்சிறு முருகனை
அக்கண மணமருள் ...... பெருமாளே.