பிரிவு - 1, 2, 3 

பண்ணிசைப் பாடல்கள்

போட்டி விதிமுறைகள்

1.பண்ணோடு தாளத்தோடு பாட வேண்டும்
2.நேரம் 10 மணித்துளிகள்
3.நால்வர் துதி, விரும்பிய இரண்டு தேவாரங்கள் பாடவேண்டும்
4.நடுவர்கள் முடிவே இறுதியானது
5.போட்டி ZOOM செயலி மூலம் இடம்பெறும்
6.போட்டி நடைபெறும் திகதி, ZOOM இணைப்பு பின்னர் வழங்கப்படும்.

பாடத்திட்டம்

1. நால்வர் துதி
2. திருஞானசம்பந்தர் சம்பந்தர் அருளிய முதல் தேவாரம்
3. திருநாவுக்கரசர் அருளிய முதல் தேவாரம்
4. சுந்தரமூர்த்தி நாயனார் அருளிய முதல் தேவாரம்

நால்வர் துதி

ராகம் : கம்பீர நாட்டை
தாளம்: ரூபகம்
அருளியவர் : உமாபதி சிவாச்சாரியார்

பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன்
கழல்போற்றி
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரான்
அடிபோற்றி
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர்
பதம்போற்றி
ஊழிமலி திருவாதவுரர் திருத்தாள் போற்றி.

தேவாரம் 1
திருப்பிரமபுரம்

பண்:  நட்டபாடை
ராகம்:  கம்பீரநாட்டை
தாளம்:  ரூபகம்

தோடுடைய செவியன்விடை
யேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசிஎன்1
உள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந்
தேத்தஅருள் செய்த
பீடுடையபிர மாபுரம்மேவிய
பெம்மானிவன்றே

தேவாரம் 2
திருவதிகை வீரட்டானம்
பண்:  கொல்லி
ராகம்:  நவரோஜ்
தாளம்:  ஆதி

கூற்றாயின வாறுவி லக்ககிலீர்
கொடுமைபல செய்தன நானறியேன்
ஏற்றாயடிக் கேஇர வும்பகலும்
பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே
குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன்அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே.

தேவாரம் 3
திருவெண்ணெய்நல்லூர்

பண்:  இந்தளம்
ராகம்:  மாய மாளவ கவுளை
தாளம்:  ரூபகம்

பித்தாபிறை சூடீபெரு
மானே அருளாளா
எத்தான்மற வாதேநினைக்
கின்றேன்மனத் துன்னை
வைத்தாய்பெண்ணைத் தென்பால்
வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள்
அத்தாஉனக் காளாயினி
அல்லேன்எனல் ஆமே.