சுவாமி விபுலாநந்தர் கலை மன்றம் - கனடா
வருடாந்த போட்டிகள் - 2025


விண்ணப்பமும் போட்டிக்கு 
தயார்படுத்தும் ​ஆவணங்களுக்கும். 

Age Range / வயது எல்லை Application Form போட்டிகள் போட்டிகள் போட்டிகள் போட்டிகள்
Jan 01, 2019 க்கு பின் பிறந்தோர் Division 1 பேச்சு ஆத்திசூடி பண்ணிசை
Jan 01, 2017 - Dec 31, 2018 இல் பிறந்தோர் Division 2 பேச்சு கொன்றைவேந்தன் பண்ணிசை
Jan 01, 2015 - Dec 31, 2016 இல் பிறந்தோர் Division 3 பேச்சு சொல்வதெழுதுதல் திருக்குறள் பண்ணிசை
Jan 01, 2013 - Dec 31, 2014 இல் பிறந்தோர் Division 4 பேச்சு சொல்வதெழுதுதல் திருக்குறள் பண்ணிசை
Jan 01, 2011 - Dec 31, 2012 இல் பிறந்தோர்) Division 5 பேச்சு சொல்வதெழுதுதல் திருக்குறள் பண்ணிசை
Jan 01, 2009 - Dec 31, 2010 இல் பிறந்தோர் Division 6 பேச்சு காட்சிப்படுத்தல் திருக்குறள் பண்ணிசை

விபரங்களும் விதிமுறைகளும்
Competition Guidelines 

 விபரங்களும் விதிமுறைகளும்


போட்டிகளுக்குத் தேவையான பேச்சுகள், சொல்வதெழுதலுக்குரியசொற்கள், திருக்குறள், பாரதியாரின் புதிய ஆத்திசூடிகொன்றைவேந்தன், பண்ணிசைக்குரிய பாடல்கள், (பாடல்களுக்குரிய ஒலிப்பதிவுகள்)  என்பன எமது இணையத்தளத்தில் ( https://vipulam.org/competition-guideline/) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

பேச்சுப் போட்டி : பிரிவு 1 - 6
        
பிரிவுகள்           தலைப்பு
        
பிரிவு 1 :   சுவாமி விபுலாநந்தர்
பிரிவு 2 :   முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தர்
பிரிவு 3 :   பேராசிரியர் சு.வித்தியானந்தன்
பிரிவு 4 :   சுவாமி விபுலாநந்தரின் கல்விப்பணிகள்
பிரிவு 5 :   பேராசிரியர் சுவாமி விபுலாநந்தர்
பிரிவு 6 :   சுவாமி விபுலாநந்தரின் பன்முக ஆளுமைகள்

பிரிவு – 1: நீதிநூல் போட்டி: (பாரதியாரின் புதிய ஆத்திசூடி
* முதல் 15 ஒற்றைவரி பாக்களையும் முழுமையாக மனனம் செய்து உச்சரிப்பு பிழையின்றி கூறவேண்டும்.

பிரிவு - 2 : நீதிநூல் போட்டி (கொன்றை வேந்தன்) 
* முதல் 15 ஒற்றைவரி பாக்களையும் முழுமையாக மனனம் செய்து உச்சரிப்பு பிழையின்றி கூறவேண்டும்.

பிரிவு 3, 4, 5 சொல்வதெழுதுதல் போட்டி
பிரிவு - தரப்பட்ட சொற்களில் இருந்து 15 சொற்களும் மேலதிகமாக இவை போன்ற 6 புதிய சொற்களும் கேட்கப்படும்.

பிரிவு - தரப்பட்ட சொற்களில் இருந்து 20 சொற்களும் மேலதிகமாக இவை போன்ற 8 புதிய சொற்களும் கேட்கப்படும்.

பிரிவு 5 - தரப்பட்ட சொற்களில் இருந்து 30சொற்களும் மேலதிகமாக இவை போன்ற 10 புதிய சொற்களும் கேட்கப்படும்.

குறிப்பு - போட்டியாளர்கள் சமமான புள்ளிகளைப் பெறும் போது,  (Tie break) மேலதிகமாக வழங்கப்பட்ட சொற்களில் பெறப்பட்ட புள்ளிகளைக் கொண்டு வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவர். 

பிரிவு 6 (காட்சிப்படுத்தல்) சுய ஆக்கம் : விளக்கக்காட்சி (Presentation)

கீழே தரப்பட்டுள்ள தலைப்பிற்கான சுய ஆக்கத்தினை 5 நிமிடத்திற்கு குறையாமலும் 7 நிமிடத்திற்கு மேற்படாமலும் தயாரித்து முன்வைத்தல் வேண்டும்.

             1. சுவாமி விபுலாநந்தர் அல்லது 
             2. வேள் பாரி      

பிரிவு 3, 4, 5, 6 திருக்குறள்: 

பிரிவு 3. அதிகாரம் 08 – அன்புடைமை
பிரிவு 4. அதிகாரம் 30 - வாய்மை
பிரிவு 5. அதிகாரம் 43 - அறிவுடைமை 
பிரிவு 6. அதிகாரம் 82 – தீ நட்பு

*பிரிவு 3, 4 தரப்பட்டுள்ள அதிகாரத்திலுள்ள முதல் 10குறள்களிலிருந்து 7குறள்களும் அதற்கான விளக்கமும் (தமிழில்) நடுவர்களால் கேட்கப்படும்.

* பிரிவு 5,  6 தரப்பட்டுள்ள அதிகாரத்திலுள்ள10 குறள்களும் அதற்கான விளக்கமும் (தமிழில்) நடுவர்களால் கேட்கப்படும்.

* முழுமையாக மனனம் செய்து பொருள் விளங்க கூறவேண்டும்.

* பிரிவு 3, 4 போட்டியாளர்கள் தாம் கூறவேண்டிய குறள்களை தாமே தெரிவு செய்ய வேண்டும். அவை  இலக்கமிடப்பட்டு பேழையில் வைக்கப்பட்டிருக்கம்.

குறள்களையும் விளக்கத்தினையும் உச்சரிப்புப் பிழையின்றி கூறவேண்டும்.


பண்ணிசைப் போட்டிகள் :

போட்டிகள் இரண்டு பகுதிகளா இடம்பெறும். 

முதல் பகுதியில் பிரிவுகள் 1, 2, 3 மாணவர்களும், இரண்டாம் பகுதியில் பிரிவுகள் 4, 5, 6 மாணவர்களும் பங்குபற்றலாம்.
ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியாகப் பரிசுகள் வழங்கப்படும்.     

பொது விதிமுறைகள் :

பிறந்த திகதியை உறுதிப்படுத்துவதற்கு போட்டியாளர் தமது மருத்துவ அட்டை (Health Card) அல்லது பிறப்புச் சான்றிதழ் (Birth Certificate) ஆகியவற்றில் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும். 

சகல போட்டிகளும் July 13, 2025, காலை 9:30 மணிக்கு ஆரம்பிக்கப்படும். 9:00 மணிக்கு போட்டியாளர்கள் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பதிவுக்கட்டணம் - ஒரு போட்டிக்கு 20 டொலர்கள், மேலதிகமான ஒவ்வொரு போட்டிக்கும் தலா 05 டொலர்கள் கட்டணமாகச் செலுத்த வேண்டும். 
vipulamcanada@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு E -Transfer மூலம் அனுப்ப வேண்டும். E -Transfer செய்யும்போது தகவற் பகுதியில் (Message) மாணவரின் முழு பெயர் மற்றும் விண்ணப்பிக்கும் பிரிவு என்பன குறிப்பிட வேண்டும் .  

பண்ணிசைப் போட்டிக்கான கட்டணம் மேலதிகமாக 10 டொலர்கள் செலுத்தப்பட வேண்டும் .

நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது. 

விண்ணப்பப் படிவங்களை இறுதித் திகதிக்கு முன்பு கிடைக்கக் கூடியதாக எமது இணையத்தளத்தில்
( https://vipulam.org/application/) பூர்த்தி செய்யலாம் அல்லது vipulamcanada@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பிவைக்கலாம். 
போட்டியாளர்கள் தங்கள் வயதிற்குரிய பிரிவில் மட்டுமே போட்டியிட முடியும். 

 விண்ணப்ப முடிவுத் திகதி - July 05, 2025

தொடர்புகளுக்கு : Uthayan - 647-859-5779   /  Kumarakuru - 647 224 8871  /  Prasanth  416-629-5506