சுவாமி விபுலாநந்தர் கலை மன்றம் - கனடா
வருடாந்த போட்டிகள் - 2025


விபரங்களும் விதிமுறைகளும்

Competition Guidelines

 போட்டிகளுக்குத் தேவையான கட்டுரைகள், சொற்கள், திருக்குறள், ஆத்திசூடி, கொன்றைவேந்தன், பொது அறிவு வினா-விடை என்பன எமது இணையத்தளத்தில் (​http://vipulam.org/home/competition/) பதிவேற்றம்  செய்யப்பட்டுள்ளது.

பேச்சுப் போட்டி : பிரிவு 1 - 6
        

       பிரிவுகள்           தலைப்பு
        
        பிரிவு 1 :             சுவாமி விபுலாநந்தர்
        பிரிவு 2 :             முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தர்
        பிரிவு 3 :             சுவாமி விபுலாநந்தரின் சமூகப்பணிகள்
        பிரிவு 4 :             சுவாமி விபுலாநந்தரின் கல்விப்பணிகள்
        பிரிவு 5 :             பேராசிரியர் சுவாமி விபுலாநந்தர்
        பிரிவு 6 :             சுவாமி விபுலாநந்தரின் பன்முக ஆளுமைகள்

நீதிநூல் போட்டி (ஆத்திசூடி) : பிரிவு - 1

* முதல் 13 ஒற்றைவரி பாக்களையும் முழுமையாக மனனம் செய்து உச்சரிப்பு பிழையின்றி கூறவேண்டும்.

நீதிநூல் போட்டி (கொன்றை வேந்தன்) : பிரிவு - 2

* முதல் 13 ஒற்றைவரி பாக்களையும் முழுமையாக மனனம் செய்து உச்சரிப்பு பிழையின்றி கூறவேண்டும்.

சொல்வதெழுதுதல் போட்டி : பிரிவு 3, 4, 5

பிரிவு 3 - தரப்பட்ட சொற்களில் இருந்து 15 சொற்களும் மேலதிகமாக இவை போன்ற 4 புதிய சொற்களும் கேட்கப்படும்.

பிரிவு 4 - தரப்பட்ட சொற்களில் இருந்து 20 சொற்களும் மேலதிகமாக இவை போன்ற 6 புதிய சொற்களும் கேட்கப்படும்.

பிரிவு 5 - தரப்பட்ட சொற்களில் இருந்து 25 சொற்களும் மேலதிகமாக இவை போன்ற 8 புதிய சொற்களும் கேட்கப்படும்.

குறிப்பு - போட்டியாளர்கள் பெறும் புள்ளிகளில் சமநிலை காணப்படும் பட்சத்தில், புதிய சொற்கள் வழங்கப்பட்டு, அதன் பெறுபேறுகளைக் கொண்டு இறுதி முடிவெடுக்கப்படும். (Tie Break)

சுய ஆக்கம் : பிரிவு 6 (காட்சிப்படுத்தல்)

விளக்கக்காட்சி (Presentation)

கீழே தரப்பட்டுள்ள தலைப்பிற்கான சுய ஆக்கத்தினை 5 நிமிடத்திற்கு குறையாமலும் 7 நிமிடத்திற்கு மேற்படாமலும் தயாரித்து முன்வைத்தல் வேண்டும்.

             1. சுவாமி விபுலாநந்தர் அல்லது 

             2. உலகின் முதல் மொமி தமிழ்

திருக்குறள் : பிரிவு 3 - 6

பிரிவு 3. அதிகாரம் 16 - பொறையுடைமை 
பிரிவு 4. அதிகாரம் 23 - ஈகை
பிரிவு 5. அதிகாரம் 38 - ஊழ் 
பிரிவு 6. அதிகாரம் 60 - ஊக்கமுடமை

*பிரிவு 3 - 4 தரப்பட்டுள்ள அதிகாரத்திலுள்ள முதல் 7 குறள்களிலிருந்து 4 குறள்களும் அதற்கான விளக்கமும் (தமிழில்) நடுவர்களால் கேட்கப்படும்.

* பிரிவு 5 - 6 தரப்பட்டுள்ள அதிகாரத்திலுள்ள முதல் 10 குறள்களிலிருந்து 5 குறள்களும் அதற்கான விளக்கமும் (தமிழில்) நடுவர்களால் கேட்கப்படும்.

* முழுமையாக மனனம் செய்து பொருள் விளங்க கூறவேண்டும்.

* போட்டியாளர்கள் தாம் கூறவேண்டிய குறள்களை தாமே தெரிவு செய்ய வேண்டும். அவை  இலக்கமிடப்பட்டு பேழையில் வைக்கப்பட்டிருக்கம்.

குறள்களையும் விளக்கத்தினையும் உச்சரிப்புப் பிழையின்றி கூறவேண்டும்.


சிறுகுறிப்பு எழுதுதல் : பிரிவு 5, 6

 * கீழே தரப்பட்டுள்ள மூன்று தலைப்புகளில் ஒன்றினைத் தெரிவுசெய்து அதுபற்றி சுயமாக 5 வசனம் எழுதுதல் வேண்டும்.
* தலைப்பிற்கேற்ப வசனம் அமைந்திருத்தல் வேண்டும்.
* எழுத்துப் பிழையின்றி, உறுப்பமைய நேர்த்தியாக எழுதப்படல் வேண்டும்.
* நிறுத்தக் குறிகள் பொருத்தமான இடத்தில் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

தலைப்புகள் :

1. நீர் அறிந்த தமிழ்ப் பெரியார்
2. உமது தாய் நாடு 
3. நயகரா நீர் வீழ்ச்சி


பொது அறிவுப் போட்டி : பிரிவு 5, 6

தரப்பட்டுள்ள 60 வினாக்களில் இருந்து 40 வினாக்களும் மேலதிகமாக இவை போன்ற 10 வினாக்களும் கேட்கப்படும். போட்டியாளர், கேட்கப்படும் வினாவிற்குரிய சரியான விடையினை, தரப்படும் மூன்று விடைகளில் இருந்து தெரிவு செய்ய வேண்டும்.

குறிப்பு : போட்டியாளர்கள் பெறும் புள்ளிகளில் சமநிலை காணப்படும் பட்சத்தில், புதிய வினாக்கள் வழங்கப்பட்டு அதன் பெறுபேறுகளைக் கொண்டு இறுதி முடிவெடுக்கப்படும். (Tie Break)

பொது விதிமுறைகள் :

• வினாத்தாள்கள் யாவும் போட்டி நடைபெறும் மண்டபத்தில் வைத்தே வழங்கப்படும்.

• பிறந்த திகதியை உறுதிப்படுத்துவதற்கு போட்டியாளர் தமது மருத்துவ அட்டை (Health Card) அல்லது பிறப்புச் சான்றிதழ் (Birth Certificate) ஆகியவற்றில் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.

• சகல போட்டிகளும் July 13 2025, காலை 9:30 மணிக்கு ஆரம்பிக்கப்படும். 9:00 மணிக்கு போட்டியாளர்கள் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பதிவுக்கட்டணம் - ஒரு போட்டிக்கு 20 டொலர்கள், மேலதிகமான ஒவ்வொரு போட்டிக்கும் 05 டொலர்கள். (போட்டி நடைபெறும் தினத்தன்று செலுத்தப்பட வேண்டும்).

• நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

• விண்ணப்பப்படிவங்களை இறுதித் திகதிக்கு முன்பு கிடைக்கக் கூடியதாக எமது இணையத்தளத்தில்
( http://vipulam.org/home/application/) பூர்த்தி செய்யலாம் அல்லது vipulamcanada@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பிவைக்கலாம்.

• போட்டியாளர்கள் தங்கள் வயதிற்குரிய பிரிவில் மட்டுமே போட்டியிட முடியும்.

விண்ணப்ப முடிவுத் திகதி - July 05, 2025

தொடர்புகளுக்கு : Uthayan - 647-859-5779   /  Kumarakuru - 647 224 8871  /  Prasanth  416-629-5506